Saturday, January 18, 2025

சுரேஷ் கோபிக்கு வில்லனாகும் வேதாளம் பட வில்லன்… மார்கோ படத்தை தொடர்ந்து மிரட்ட வரும் கபீர் துகான் சிங்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துகான் சிங். தொடர்ந்து றெக்க, காஞ்சனா 3, ஆக்ஷன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மற்றொரு பக்கம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்த இவர், கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான டர்போ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார்.

அதைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அஜயன்டே ரெண்டாம் மோசனம் என்ற படத்திலும் வில்லனாக நடித்தார். ஆனால், சில வாரங்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளார்.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் ஒத்த கொம்பன் என்ற படத்தில் வில்லனாக நடிக்க கபீர் துகான் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மேத்யூ தாமஸ் இயக்குகிறார்.

- Advertisement -

Read more

Local News