Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஆட்டோ ஓட்டுனரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள்… டிராபிக் போலீஸாக கறார் காட்டும் சுனைனா… கவனம் ஈர்த்த’ராக்கட் டிரைவர் ‘ டிரைலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்டோரிஸ் பை தி ஷோர் நிறுவனத்தின் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு, படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  

‘ராக்கெட் டிரைவர்’ படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர். வெளியிட்டார். தனித்துவமான கதையமைப்பு கொண்ட பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை தாண்டி வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில், ‘ராக்கெட் டிரைவர்’ புதிய படமாக இணைகிறது. இந்தப் படம் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பற்றியது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாகக் கொண்டுள்ள இந்த ஆட்டோ ஓட்டுநர், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார்.  

அந்த சந்திப்பில் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் தொடர்ச்சியாக நடந்துகொள்ளும் சம்பவங்கள் கலகலப்பான விதத்தில் சொல்லப்படும். இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுக நாயகன் விஸ்வத் நடித்துள்ளார். நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

‘ராக்கெட் டிரைவர்’ படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைக்க, ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்புப் பணிகளை இனியவன் பாண்டியன் மேற்கொண்டு, கலை இயக்கத்தினை பிரேம் கருந்தமலை செய்துள்ளார். இந்தப் படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த் எஸ், ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News