சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘குபேரா’. இப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை அமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார். திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் நேரம் ஆரம்பத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் என இருந்தது. தற்போது, அதை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர். இதனிடையே, ‘குபேரா’ படத்தின் டிரெய்லரை இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அந்த டிரெய்லர் நாளை நடைபெறும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.