மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் ஹாஸன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ளார். இப்படம் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூலமாக இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. தற்போதா இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 2 நிமிடங்களுக்கு ஓடும் இந்த டிரெய்லரில் கமலுக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதலே கதையின் மையமாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
இயக்குனரின் காட்சிப்பதிவில், கமலின் கதாபாத்திரம் ஒரு கேங்ஸ்டர். அவருடைய உயிரை சின்ன வயதில் சிம்பு காப்பாற்றுவார் என காட்டப்படுகிறது. அதன்பின், சிம்புவை கமல் தனது மகனைப் போல் வளர்க்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவாகி, அவர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டுடன் மோதுகின்றனர்.டிரெய்லர் முழுவதும் காட்சிகள், பின்னணி இசை, கமல் மற்றும் சிம்புவின் எமோஷனல் ஆக்ஷன் சிக்வன்ஸ்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அதோடு, கமலின் மனைவியாக அபிராமி மற்றும் காதலியாக திரிஷா வருவார்கள் என்பதும் டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 30 மில்லியன் வரை வியூவ்ஸ் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.