தமிழில் ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘மண்டேலா’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸின் சஷிகாந்த் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘டெஸ்ட்’. இந்த திரைப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதற்கு முன்னர் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ‘ஆய்த எழுத்து’, ‘ரங் தே பசந்தி’ போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘டெஸ்ட்’ திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்த படத்தில் சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். நயன்தாரா, மாதவனின் மனைவி குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.