மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி சமீபத்தில் ‘பசூக்கா’ என்ற படத்தில் நடித்திருந்தார். டீனா டென்னிஸ் இயக்கிய அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது மம்முட்டி ‘களம்காவல்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்த விநாயகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘குரூப்’, ‘ஓஷானா’ போன்ற படங்களுக்கு கதை எழுதிய ஜிதின் கே. ஜோஷ் இயக்கியுள்ள இந்த படம் ஒரு முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் வகை படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காவல்துறைக்கே சவால் விடும் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அதே சமயம், விநாயகனின் வில்லன் கதாபாத்திரமும் படத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இருவரின் மோதல் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘களம்காவல்’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

