பிரபல நடிகை கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள ‘மா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானதுடன், இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில் முக்கிய நடிகையாக திகழும் கஜோல், இந்த முறையில் ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகும் ‘மா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஷால் பியூரியா இயக்கும் இந்த படத்தை, நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கஜோலுடன் ரோனித் போஸ் ராய், இந்திரன் சென்குப்தா மற்றும் கெரின் ஷர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய நான்கு மொழிகளில் வருகிற ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு, பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.