பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு திரையுலக நட்சத்திரமான ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படம் வார் 2. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், கியாரா அத்வானி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். வெறும் கவர்ச்சிக்கு மட்டும் இல்லாமல், அவரது வேடத்திலும் ஆழமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. அவர் மிகச் சிறந்த ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.