தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தவர் நடிகர் சூரி. ஆனால் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தின் மூலம் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து வெற்றியை கண்டார். அவரது நடிப்பு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். தற்போது அவர், பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘மாமன்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படம், ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்படுகிறது.
இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்வாசிகா, சூரியின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த ‘மாமன்’ திரைப்படம் மே 16ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கான டிரெய்லரும் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.