தமிழ் திரையுலகில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கிய விஷால் வெங்கட், தற்போது ‘பாம்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.
மேலும், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவை ராஜ்குமார் மேற்கொண்டு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.
இந்நிலையில், ‘பாம்’ படத்தின் தலைப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.