டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் – ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் கிஸ் படம் இந்த வாரம் வெளியாகிறது. இதை பற்றி கவின் கூறுகையில், “இது எனக்கு ஆறாவது படம். இந்த தலைப்பு முதலில் இயக்குனர் மிஷ்கினிடம் இருந்தது. அவர் எங்களுக்காக எந்த நிபந்தனையும் இன்றி விட்டுக்கொடுத்தார். அதுபோல, அனிருத் முதல் சிங்கிள் பாடியதற்கும், விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்கும், விக்னேஷ் சிவன் பாடல் எழுதியதற்கும், அருண்ராஜா பாடியதற்கும் நன்றி சொல்ல வேண்டியது தான்.

தலைப்பு காரணமாக படத்தில் எத்தனை கிஸ் சீன்கள் இருக்கிறது, டிக்கெட் கவுன்டரில் எப்படி கேட்பார்கள் என்று பலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். விடிவி கணேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் தெலுங்கில் பிஸியாக இருந்தும் எங்களுக்காக வந்து பேசியது பெருமை. ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடித்துள்ளார். படப்பிடிப்பு தாமதமானதால் பல உதவி இயக்குநர்கள் விட்டு சென்றார்கள். ஆனால் விஷால் மட்டும் நம்மோடு இருந்தார் அவருக்கு ஸ்பெஷல் நன்றி,” என்றார்.

