இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன். இந்த ‘குட் பேட் அக்லி’ என்ற தலைப்பை அஜித் சார் தான் சொன்னார். கதையை எழுதிக்கொண்டே படக்குழுவோடு அமர்ந்து விவாதிப்போம் அதில் சிறப்பான விஷயங்கள் அமையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு கட்டத்திலும், இந்தக் காட்சியில் அஜித் சார் இருந்தால் அது எப்படி அமையும் என பேசிக்கொண்டே செல்லும் போது, அடுத்தடுத்த காட்சிகள் மனதில் ஓடும். அவற்றை திரையில் உயிர்ப்பாக கொண்டுவர முயன்றுள்ளோம் என்றுள்ளார்.
