மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து, சஷிகாந்த் இயக்கிய ‘டெஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த், ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது ஒரு வாழ்க்கை போல உள்ளது. யாரை கேட்டாலும் அவர்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று கூறுவார்கள். நானும் அவர்களில் ஒருவன்.

தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்தும், விளையாடியும் அந்த விளையாட்டுடன் பலரும் பழகி இருப்பார்கள். அதனால், ஒரு கிரிக்கெட் வீரராக நடிப்பது வெறும் சினிமா நடிப்பாக இருக்கக்கூடாது. ‘டெஸ்ட்’ கிரிக்கெட் வீரராக நடிப்பது மிகவும் சவாலானது. நிறைய நிஜ கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து தூண்டுதலாகிப் பிறகு தான் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்தேன்.
நீங்கள் கிரிக்கெட் பார்க்கும்போது அடையும் பதற்றம், இந்தப் படத்தையும் பார்க்கும் போது ஏற்படுமானால், அதுவே எங்களுக்கான வெற்றி. எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்,” என தெரிவித்துள்ளார்.