2019 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் “லூசிஃபர்”. இந்தப் படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவது உறுதியாகி, “எம்புரான்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க, முரளி கோபி கதையை எழுதியுள்ளார். இயக்குநர் பிருத்விராஜ், இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார்.
படத்தின் போஸ்டரில், பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் ஜதின் ராம்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.”எம்புரான்” படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இதற்கான எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. தற்போது, இப்படத்தின் டீசர் ஜனவரி 26-ஆம் தேதி இரவு 7.07 மணிக்கு வெளியாகும் என இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜ் அறிவித்துள்ளார். இப்படம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.