‘பிரம்மயுகம்’ படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கத்தில், பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி, ஒரே மாதத்தில் நிறைவடைந்தது. இப்படத்துக்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) என பெயரிட்டுள்ளனர். லத்தீன் மொழியில் இதன் பொருள் ‘மரணம்’ என்று பொருள்படும்.
தற்போது ‘டைஸ் ஐரே’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பேய்ப்படமாக உருவாகியுள்ள இதன் காட்சிகள், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.