தமிழில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னதாக, வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து ‘மாரீசன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார், மேலும் இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் வி. கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார், மேலும் அவர் கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இப்படம் ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.