Touring Talkies
100% Cinema

Sunday, October 12, 2025

Touring Talkies

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ படத்தின் டீஸர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் பொன்ராம், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொன்ராம் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சரத்குமாரும், நாயகியாக தார்னிகாவும் நடித்துள்ளனர். தார்னிகா, “நாட்டாமை” படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் 1996 ஆம் ஆண்டில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் வைகை அணை பகுதிகளில் நிகழ்ந்த கதைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம், ‘கொம்புசீவி’ படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ‘கொம்புசீவி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News