இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கிய ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் வெளியாகிமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக ‘தண்டகாரண்யம்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தண்டகாரண்யம் என்பது ராமாயண இதிகாசத்தில் வரும் காட்டின் பெயர். இந்த திரைப்படம் பயங்கரவாதம், காவல்துறை மற்றும் காடு சார்ந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை, இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லெர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும், ரித்விகா, வின்சு சாம், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர்-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது.