தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ், தனது இயக்கனிலும் நடிப்பிலும் உருவான ‘காஞ்சனா’ படங்கள் மூலம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நடித்துள்ள அடுத்த படம் ‘புல்லட்’. இந்த படத்தை இன்னசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். அவர் இதற்கு முன்பு அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார்
‘புல்லட்’ திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்ததுடன், அவரது தம்பி எல்வின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக வைஷாலி ராஜ் நடித்துள்ளார்.
இப்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில், படத்தின் டீசரை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசரை நடிகர் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீசரில், ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கும், ஏற்கனவே வேறொரு நபரின் வாழ்க்கையுடன் உள்ள தொடர்பையும் காட்சிகள் மூலம் சொல்லியுள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.