மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் தக்லைப். இதில் அவருடன் சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதட்டத்தின் காரணமாக, இசை விழாவின் தேதி மாற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அந்த பதட்டம் சமாதானமானதால், தக்லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு இசைக்கச்சேரி வழங்க உள்ளார். மேலும், இப்படத்தின் டிரைலர் மே 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.