கடந்த ஆண்டு, இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்கா மீடியா தயாரிப்பில் பஹத் பாசில் தெலுங்கு மொழியில் இரண்டு படங்களில் நடிப்பார் என தகவல் வெளியானது.

அதில் டோண்ட் டிரபுள் தி டிரபுள்’ என்ற படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டநிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு இப்போதுதான் தொடங்கியுள்ளதால், மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.
இந்தப் படத்தை இயக்குனர் ஷஷாங்க் யெலெட்டி இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். கால பைரவா இசையமைக்கிறார்.