Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஆயுத பூஜை வாழ்த்துக்களுடன் ஸ்பெஷல் கிளிம்ஸ் வீடியோ வெளியிட்ட ‘பன் பட்டர் ஜாம்’ படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனுஷ்கா நடித்த “சைஸ் ஸீரோ” மற்றும் தேசிய விருது பெற்ற “பாரம்” ஆகிய படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத். அதன் பின்னர், “அவள் வசந்தம்” எனும் படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். தற்போது, ராகவ் மிர்தாத் இயக்கும் அடுத்த படமான “பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தில், பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். கூடுதலாக, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாபு ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியிடப்பட்டது. “ரெயின் ஆஃப் ஆரோஸ்” தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆயுத புஜை விழாவை முன்னிட்டு, படக்குழு சிறப்பு வாழ்த்துக்களுடன் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News