விஜய் ஆண்டனி தனது திரையுலக பயணத்தை முதலில் இசையமைப்பாளராகத் தொடங்கினார். பின்னர் “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நடிகராகவும் ரசிகர்களிடையே புகழ்பெற்றார்.
தற்போது, ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’, ‘மாயவன்’ போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு “மார்கன்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஒரு குற்றத் திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘மார்கன்’ திரைப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரும், தீம் பாடலும் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இப்படத்தின் முதல் ஆறு நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது