சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில், 15 நிமிட கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். கூலி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் தங்கக் கடத்தலை மையக் கதையாகக் கொண்டு உருவாகியுள்ளது. முக்கியமான ஒரு சண்டைக் காட்சி தாய்லாந்தில் சென்று படமாக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சூழலில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் ‘தாஹா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திர போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.