‘கேஜிஎப்’, ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு 2022ம் ஆண்டிலேயே வெளியாகியிருந்தது. இருப்பினும், தற்போது சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தில் ருக்மணி வசந்த் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தலைப்பு, ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பிரசாந்த் நீல் முன்னதாக ஒரு பேட்டியில் இந்தப் படத்திற்கு ‘டிராகன்’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அந்த தலைப்பே இறுதியாக இருக்கும் அல்லது வேறு தலைப்பை அறிவிப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.