‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு பிறகு ராம் சரண் ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காதல் கதையான ‘உப்பெனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சிவராஜ்குமார், ‘மிர்சாபூர்’ புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.