பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘என்டிஆர்நீல்’ படக்குழு, தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. “படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என்ற தலைப்புடன் ஒரு புதிய புகைப்படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் சலூன் கடையில் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபாஸுடன் ‘சலார்’ படத்தை இயக்கிய பிறகு, தற்போது பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து ‘என்டிஆர்நீல்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘காந்தாரா 2’ படத்தில் நடித்த ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான இசையை ரவி பஸ்ரூர் அமைக்கிறார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகுந்த செழிப்புடன் தயாரித்து வரும் இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

