2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த சண்டக்கோழி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 வெளியாகியது.

இந்நிலையில், விஷால் தனது யூடியூப் சேனலில், ‘சண்டக்கோழி’ படம் முதலில் விஜய்க்காக எழுதப்பட்ட கதை தான்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் விளக்கமாகப் பேசியபோது, “லிங்குசாமி ‘சண்டக்கோழி’ படக்கதையை முதலில் விஜய்க்காக எழுதினார்.
ஆனா, அவரிடம் ஒரு கதை இருப்பதை தெரிந்தவுடன் நான் போய் கேட்டேன் ‘நீங்க ஒரு கதை வைத்திருக்கீங்கனு கேட்டேன், அதை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமா?’ன்னு. அதுக்கு அவர், ‘அது மாஸ் ஹீரோவுக்காக எழுதுன கதை’ன்னு சொன்னார். அதுக்கு நான், ‘இன்னும் 10 நாள்ல நான் நடித்த செல்லமே படம் ரிலீஸ் ஆகும், அதை நீங்க பாருங்க’ன்னு சொல்லிட்டுப் புறப்பட்டேன்.
செல்லமே படம் செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த பிறகும் அவருக்கு கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனா நான் வீட்டிலேயே, ‘ரெண்டு வருஷம் காத்திருந்தாலும் பரவாயில்லை, அவரு வைத்திருக்கும் கதை பத்து படத்துக்கு சமம். கண்டிப்பா இந்தக் கதையில் நடித்தா அது நம்மல வேறொரு நிலைக்கு எடுத்துச்செல்லும்’ன்னு சொல்லிட்டேன். கடைசியில் லிங்குசாமியும் ஒத்துக்கிட்டார். அப்புறம் நாங்க இருவரும் சேர்ந்து ‘சண்டக்கோழி’யை பாசிட்டிவா தொடங்கினோம்,” என விஷால் தெரிவித்துள்ளார்.

