இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருக்கிறது.

இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா, சவுபின் சாகிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அமீர் கான் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ரஜினி சாருக்கு நான் முதலில் வைத்திருந்த கதை ஒரு ஃபேண்டஸி கதை அதில் ரஜினி சாரை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் அந்த படம் எடுக்க இரண்டு வருடங்கள் வரை நேரம் எடுத்திருக்கும். ரஜினி சாரின் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. பின்னர் தயார் செய்த கதை தான் கூலி என தெரிவித்துள்ளார்.