நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படமாக ‘ரெட்ரோ’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ம் தேதி திரையிடப்பட இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தில் வெளியான ‘கண்ணாடி பூவே’ மற்றும் ‘கனிமா’ ஆகிய பாடல்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில், அடுத்ததாக ‘தி ஒன்’ என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதியிருக்க, பாடலை சித்ஸ்ரீராம் பாடியிருக்கிறார்; அதேபோல ராப் பகுதியை SVDP பாடியுள்ளார். இந்தப் பாடல் மிகவும் உத்வேகமான தன்மையுடன் அமைந்துள்ளது.
இந்தப் பாடலுக்கான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரெட்ரோ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை சூர்யா முழுமையாக முடித்துவிட்டுள்ளார். மேலும், இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, சென்னையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.