தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே ‘சிந்துபாத்’ திரைப்படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார். இப்போது, சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அனல் அரசு. இவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில், சூர்யாவுடன் சேர்ந்து வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டீசரில் ஆரம்ப காட்சியே சிறுவர் சீர்த்திருத்தக் கேந்திரியுடன் தொடங்குகிறது. சூர்யா முகம் மூடியபடி கைதில் கட்டிய நிலையில் காணப்படுகிறார். பின்னர், பாக்ஸிங் வீரராக சண்டைக் காட்சிக் இடம்பெற்றுள்ளது. ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘யாராண்ட’ பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது. அதை வித்யா தாமேந்திரன் எழுதியிருந்தார். தற்போது, ‘இந்தா வாங்கிக்கோ’ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், லோகன் எழுதிய வரிகளை கானா குணா, வேலு மற்றும் மெர்லின் ஆகியோர் பாடியுள்ளனர்.