பிரபல மலையாள நடிகர் கிஷன் தாஸ் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த ‘முதலும் நீ முடிவும் நீ’ என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சிங்க்’ மற்றும் ‘தருணம்’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இதேபோல், யூடியூபரான ஹர்ஷத் கான், பிரபல விஜே சித்துவுடன் இணைந்து வெளியிடும் வீடியோக்களால் இளைஞர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். கடந்த பிப்ரவரியில் வெளியாகிய ‘டிராகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜே சித்து இயக்கி நடிக்கவிருக்கும் ‘டயங்கரம்’ எனும் புதிய திரைப்படத்திலும் ஹர்ஷத் கான் நடித்துவருகிறார்.
இந்நிலையில், கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் இணைந்து ஆரோமலே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்கள். இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாரங் தியாகு இயக்குனராக பணியாற்ற, இசையமைப்பாளராக சித்து குமார் மற்றும் ஒளிப்பதிவாளராக கௌதம் ராஜேந்திரன் பணியாற்றுகிறார்கள். இந்த படத்திற்கு ‘ஆரோமலே’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி, ரசிகர்களிடையே கவனம் பெற்றதோடு, இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ‘ஆரோமலே’ படத்தின் “டண்டணக்கா லைப்” எனத் தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதிய வரிகளில் டி. ராஜேந்தர் பாடியுள்ளார்.