சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகிய முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் படம் 45 தி மூவி ஆகும். இந்தப் படத்தை பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை சுரஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பேண்டஸி அம்சங்கள் கலந்த கதைமாந்திரத்தில் உருவாகி வரும் இப்படம், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், க்ளிம்ப்ஸ் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியிடப்பட்டு, ரசிகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆப்ரோ டப்பாங்’ எனும் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை தமிழில் கானா காதர் எழுதியும் பாடியும் உள்ளார். இப்படத்திற்கான இசையை அர்ஜுன் ஜன்யா அமைத்துள்ளார். ஜானி நடன அமைப்பை மேற்கொண்டுள்ளார். மேலும், ஆப்பிரிக்க நடனக் கலைஞர்கள் இப்பாடலுக்காக சிறப்பு நடனமாடியுள்ளனர். தற்போது இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

