இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைந்து உருவாக்கி வரும் புதிய திரைப்படம் “தக் லைஃப்”. கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்நிலையில், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழு ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.