‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகவும், அனஸ்வரா ராஜன் ஹீரோயினாகவும் நடிக்கும் புதிய படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக, 35 நாட்களில் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினரை கவரும், காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ‘லவ்வர், டூரிஸ்ட் பேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், கதையையும் திரைக்கதையையும் எழுதி இயக்குகிறார்.