குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் சிறப்பாக தொடங்கியது. யூடியூப் பிரபலமான ‘ப்ராங்க்ஸ்டர்’ ராகுல் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் எம் எஸ் பாஸ்கர் மற்றும் ப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். காமெடி, ஹாரர் பேண்டஸி ஜானரில் உருவாகிறது.
கடைசியாக ‘பார்க்கிங் ‘ படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் எம் எஸ் பாஸ்கர். தற்போது ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.