Tuesday, December 31, 2024

கருணாஸ் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன‌ விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சமூக-அரசியல்-திரில்லர் வகை திரைப்படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த திரைப்படம் ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கருத்து தெரிவித்ததாவது, “இந்த திறமையான அணியுடன் இணைந்து பணியாற்றியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் கருணாஸ் தான் நடித்திருக்கும் கதாபாத்திரத்துக்கு முழுமையாக நியாயம் செய்திருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்று தரும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அதேபோல் நடிகை நிமிஷா சஜயனும் தனது கதாபாத்திரத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்து அசத்தியுள்ளார். இயக்குநர் சஜீவ் பழூரின் தமிழ் திரைப்படங்கள் மீது கொண்ட காதல் இந்த படத்தில் முழுமையாக வெளிப்படுகிறது. அவர் நிச்சயமாக பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவை வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவினரும், நடிகர்களும் படப்பிடிப்பு வேலைகளை விரைவாக முடிக்க முழுமையாக ஒத்துழைத்துள்ளனர். சாம் சிஎஸ் இசை, கதையின் தத்ரூபத்தையும் உத்வேகத்தையும் பெரிதும் உயர்த்தியுள்ளது. இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும். படம் தொடர்பான வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார் ஜிதேஷ் வி.கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News