வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யாவின் புதிய படத்திற்கான புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களின் பதிவு பணிகள் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தனது சமூக ஊடக பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

தற்போது, சூர்யா இயக்குநர் ஆர்ஜே பாலாஜியுடன் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு, அவர் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடராமல் தனது 46வது படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, சூர்யாவின் 46வது படத்தை இயக்க இருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வாடி வாசல் படத்திற்கான இசையமைப்பு பணிகளை ஜிவி பிரகாஷ் ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.