சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படம் சிக்கந்தர். இந்த திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி திரையிலைக்கு வர உள்ளது. தற்போது, இந்தப் படத்தைக் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குநர் முருகதாஸ் பங்கேற்று வருகிறார். அந்த நிகழ்வுகளில் ஒன்றில் அவர் அளித்த பேட்டியில், “சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் இருந்ததால், சிக்கந்தர் படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும் நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த மிரட்டலின் காரணமாக, சல்மான் கான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ஒவ்வொரு நாளும், அங்கு பணியாற்றும் அனைத்து ஜூனியர் கலைஞர்களையும் நாங்கள் கட்டாயமாக சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டோம். இதனால் பல நாட்களில் படப்பிடிப்பு தாமதமாகி விட்டது.
ஏற்கனவே சல்மான் கான் தன்னுடைய பாதுகாப்பிற்காக தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்பை வைத்திருந்தபோதிலும், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில், படக்குழு சார்பாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதன் மூலம் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்பட்டதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.