கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கிச்சா சுதீப். கடந்த 2018ஆம் ஆண்டு, இயக்குநர் அனூப் பண்டாரி இயக்கத்தில், சுதீப் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’ (சுருக்கமாக BRB) என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த படம் 2209 ஆம் ஆண்டை மையமாகக் கொண்ட புனைகதையை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதன் இடையே, மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.