‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இருகபற்று’, ‘பிளாக்’ போன்ற படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் அதன் 7வது திரைப்படத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் ‘லோகா’ மூலம் இந்திய அளவில் மக்களின் கவனம் பெற்ற கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் தேவதர்ஷினி மற்றும் வினோத் கிஷன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை திரவியம் எஸ்.என் இயக்குகிறார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு, பி. கோபிநாத், தங்கபிரபாகரன் ஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த படம் குறித்த தகவல்கள், அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

