‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘கொரில்லா’, ‘ரவுத்திரம்’, ‘கலகலப்பு 2’ போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். சமீபத்தில் அவர் நடித்த ‘பிளாக்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘அகத்தியா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஜீவா நடிக்கும் 45-வது திரைப்படத்தை, மலையாளத்தில் வெளியிட்டு வெற்றி பெற்ற ‘பேலிமி’ படத்தின் இயக்குநரான நிதிஷ் சகாதேவ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஜீவா நடிக்கும் 46-வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. ‘பிளாக்’ திரைப்படத்தை இயக்கிய பாலசுப்ரமணி மீண்டும் ஜீவாவை இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.