நடிகை அனன்யா பாண்டே நடிக்கும் “து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி” என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் அனன்யாவுடன் கார்த்திக் ஆர்யன் மற்றும் ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்வுகளுக்கான வீடியோக்கள் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகின்றன.

“பதி பத்னி அயுர் வோ” படத்திற்குப் பிறகு, கார்த்திக் ஆர்யனும் அனன்யா பாண்டேயும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும்.
இப்படத்தை “சத்யபிரேம் கி கதா” படத்தை இயக்கிய சமீர் வித்வான்ஸ் இயக்குகிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் இந்த படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டின் காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.