Touring Talkies
100% Cinema

Thursday, April 17, 2025

Touring Talkies

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘ராமாயணம்’ படத்தின் சாய் பல்லவி காட்சிகளுக்கான படப்பிடிப்பு… வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நிதிஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில், ராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடித்துவருகின்றனர். கன்னட திரைப்பட நடிகர் யாஷ், ராவணனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றுகிறார்.

இதற்கு முன்னதாக, இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாய் பல்லவி படத்தில் முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், ராவணன் சீதையை கடத்தி அசோக வனத்திற்கு கொண்டு செல்கின்ற காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனராம். இந்தப் படத்தில் சன்னி தியோல் அனுமானாகவும், பாபி தியோல் கும்பகர்ணனாகவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News