ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கூலி” இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மோனிகா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார், மேலும் இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தனது குரலில் பாடியிருக்கிறார். பூஜாவுடன் சேர்ந்து சவுபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் இந்த பாடல் காட்சியில் நடனமாடியுள்ளனர். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனுடன், ரெபா மோனிகா ஜானும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த “கூலி” திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது