Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

உருவாகிறது திரௌபதி படத்தின் இரண்டாம் பாகம்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2016 ஆம் ஆண்டு வெளியான “பழைய வண்ணாரபேட்டை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு “திரௌபதி” திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வெளியான போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியது. பின்னர், செல்வராகவன் நடிப்பில் “பகாசூரன்” திரைப்படத்தை இயக்கினார், ஆனால் இது மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், மோகன் ஜி இயக்கும் தனது ஐந்தாவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு வெளியான “திரௌபதி” திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள போஸ்டரில், “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம்…! இந்த ஆண்டு இறுதியில், ரிச்சர்ட் ரிஷி நடிப்பில், ஜிப்ரான் இசையில் திரையில் மீண்டும் மிரட்ட வருகிறாள் திரௌபதி 2” எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News