2018ஆம் ஆண்டில், விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், மற்றும் அம்மு அபிராமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ராட்சசன் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளிவந்த பின்னர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று, பெரும் வெற்றி திரைப்படமாக மாறியது.

இந்த திரைப்படத்தை ராம் குமார் இயக்க, கிப்ரான் இசையமைத்தார். இப்படத்தின் கதைக்களம் ஒரு கிரைம் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு இரண்டு வானம் என பெயரிடப்பட்டுள்ளது.