ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ படம் இன்று (அக். 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கியுள்ளார், மற்றும் இதில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இது போலீஸ் சம்பந்தமான ஆக்ஷன் கதையாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரையிடத் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தியேட்டர் முன்பில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டு என கொண்டாடினர். அதேபோல ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இப்படம் அதிகாலை 4 மணியிலேயே வெளியானது. அங்கும் ரஜினி ரசிகர்கள் படத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்நிலையில் வேட்டையன் படம் சிறப்பாக இருப்பதாகவே கருத்துக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.