அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், ஷாம், நிரா, ரஞ்சித், வெண்பா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படத்தை பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது ஒரு வாரம் தள்ளி வைத்து, மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மார்ச் 28ஆம் தேதி ‘அகத்தியா’ மற்றும் ‘சப்தம்’ ஆகிய திரைப்படங்கள், மார்ச் 7ஆம் தேதி ‘அட்ரஸ்’, ‘கிங்ஸ்டன்’, ‘ஜென்டில்வுமன்’, ‘நிறம் மாறும் உலகில்’ ஆகிய படங்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த வெளியீட்டுத் தேதியில் ‘அஸ்திரம்’ படமும் இணைந்துள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதில் குறைவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு வரை மற்ற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் படங்களுக்கு, இந்த சூழல் சவாலாக அமையக்கூடும்.