தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் ‘மாரீசன்’. மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.

கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கிராமத்து கதைக்களத்தில் நடக்கும் திரில்லராக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி, நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட வியூவ்ஸ் பெற்று வரவேற்பை பெற்றது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது, இந்த திரைப்படம் வரும் ஜூலை 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.